சந்நிதிகள்

மூலவர் ஸ்ரீவேங்கடேசப்பெருமாள்

ஒரே ஒரு முறை தர்சிக்க வந்தவரையும் ஈர்த்துக்கொள்ளும் புன்முறுவல். “என்னை சரணமடைந்துவிடு” என்று வலது திருக்கையால் தன் திருவடிகளைக் காட்டிக்கொண்டு நிற்கும் நிலை. விசேஷ காலங்களில்> பூலங்கி சேவை முத்தங்கி சேவை> ரத்னாங்கி சேவை என தன் பெருமைகளை> ஒப்பில்லா வடிவழகை> காட்டும் நிலை. “கிட்டினவர்களை கைவிடாமல் காப்பாற்றுவதற்காக ஒரு நொடியும்> உம் திருமார்பினை விட்டு பிரியாதிருப்பேன்” என்று அறிவிக்கும் அலர்மேல் மங்கை”. திருவோண திருநட்சத்திர தினங்களில் வேத பாராயண சப்தத்தோடு ஸ்தபன திருமஞ்சனம் கண்டருளும் விலக்ஷன காட்சி. காலை> மாலை வேளைகளில்> தினந்தோறும் ஆழ்வார்கள் அருளிய திவ்யப்பிரபந்த பாசுரங்களை அத்யாபகர்கள் விண்ணப்பிக்க> திருச்செவி சாய்த்து> ஆனந்தப் பெருக்கோடு மேலும்மேலும் கூடிக்கொண்டே போகும் பக்த பெருமக்களுக்கு> ஸகல சௌபாக்கியங்களையும் குறைவற அருளிக்கொண்டு> சாலக்கிராம மாலைகளோடு> மிடுக்குடன் கிழக்கு நோக்கி நிற்கும் நிலை.

உத்ஸவர் ஸ்ரீதேவி> பூதேவி ஸமேதராய் சயன மூர்த்தி மற்றும் சுதர்ஸனாழ்வாருடன்> திவ்ய சிம்மாசனத்தில்> காட்சி தருகிறார். உத்ஸவ காலங்களில்> மற்றும் ஏகாதசி போன்ற விசேஷ நாட்களில்> மற்றும் பிரார்த்தனா உபய நாட்களில்> உத்ஸவமூர்த்தி ஸ்ரீதேவி> பூதேவி ஸமேதராய்> தசாவதாரமண்டபத்தில் “திருமஞ்சன கட்டிய” சேவையுடன> நவ கலசஸ்தபன திருமஞ்சனமும் கண்டருளி> கூடிய பக்தர்களுக்கு சாந்தி சந்தோஷத்தை அபரிதமாக அருளுகிறார். ப்ரம்மோத்ஸவம்> பவித்ரோத்ஸவம்> மார்கழி மாத அத்யயன உத்ஸவம்> ஆழ்வார் ஆசார்யகள் உத்ஸவ உபக்ரம நிகம தினங்களில்> புறப்பாடு கண்டருளி பலவித நடை அழகைக்காட்டி புல்லரிக்க வைக்கிறார்.

null

தாயார் ஸன்னதி

null

மூலவர் பத்மாவதி தாயார்> பேரழகோடு> வஸ்திர> ஆபரண மாலைகளுடன் கூடி> கருணை விழி விழித்துக்கொண்டு> வாத்சல்ய பெருக்கத்துடன்> சேவிக்க வருபவர்களை கடா‍‌க்ஷிக்கும் நிலை. உத்ஸவர்> விசேஷ நாட்களில்> இருபுறமும் சாமரம் வீசும் யானைகளோடு “கஜலக்ஷ்மியாக” காட்சி தருகிறார். மூலவருக்கு ஒவ்வொரு மாதமும்> ம்ருகசீர்ஷ நட்சத்திர தினத்தில்> நவ கலச ஸ்தபன திருமஞ்சனம் வேத கோஷத்தோடு நடைபெறுகிறது. உத்ஸவர் தாயார் வெள்ளிக்கிழமைகளில்> தசாவதார மண்டபத்தில் நவகலச ஸ்தபன திருமஞ்சனமும்> மாலையில் ஊஞ்சல்; சிறிய திருமடல் சேவையுடன் புறப்பாடும் கண்டருளிகிறார். புரட்டாசி மாத நவராத்திரி தினங்களில்> மாலை வேளையில்> விசேஷமான ஊஞ்சல் சேவை> பிரசாதங்கள்> மற்றும் சுமங்கலிக்கு தாம்பூலாதிகளோடு அருள் புரிகிறார். ம்ருகசீர்ஷ நட்சத்திர நாட்களிலும்> வெள்ளிக்கிழமைகளிலும்> மாலை வேளை சேவை> சாத்துமறை> தாயார் ஸன்னதியில் நடைபெறுகிறது.

சக்கரத்தாழ்வார் ஸன்னதி

தாயார்-ஆஞ்சநேயர் ஸன்னதிகளை அடுத்து> தேற்கே> விசாலமாய் தனியாக அமைந்துள்ளது சுதர்ஸனாழ்வார் என்று கொண்டாடப்படும் சக்கரத்தாழ்வார் ஸன்னதி. ஸ்ரீமஹா விஷ்ணுவின் சக்ராயுதத்தை ஆழ்வாராகப் போற்றி வழிபட்டு> உடனே அருள் பெறுவது எளிதானது. இவரே நமக்கு நல்வழி காட்டி. ஆரோக்யம்> குறைவற்ற செல்வம்> மன அமைதி> நீண்ட ஆயுள் போன்ற உலகியல் நலன்களையும்> மறுமைக்கு மிக்க நன்மை தரும் விஷ்ணு பக்தியையும்> அன்டினவர்கள் அனைவர்க்கும்> உடனுக்குடன் அளிப்பவர். இங்குள்ள பெரிய மூலமூர்த்தி நரஸிம்ம-சுதர்ஸனர். கிழக்கு நோக்கி காட்சி தரும் முன்புர சுதர்ஸனர்> பின்புறம் மேற்கு நோக்கி நரஸிம்ம உருவில் விளங்குகிறார். இந்த நரஸிம்ம வடிவு> பக்த ப்ரஹ்லாதனுக்காக திடீரென்று தோன்றிய உக்ர நரஸிம்மம்> ஹிரண்யனை வதைத்த பின்> யோக நரஸிம்மனாக> சாந்த மூர்த்தியாக> திகழும் நிலை.

நம் கஷ்டத்தை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லிவிட்டால்> அவர் வேகமாக சுழல ஆரம்பிப்பார். அப்போது> பின்னால் இருக்கும் நரஸிம்மர் நம் அருகில் வந்து> நம் இடர்களை போக்கி> நம் குறைகளை தீர்த்துவிடுகிறார் என்பது ஐதீகம். ஒவ்வொரு மாதமும்> சித்திரை நட்சத்திரத்தன்று இந்த சுதர்ஸனாழ்வாருக்கு விசேஷமாக திருமஞ்சனம் நடைபெறுகிறது. இவரை> ஆறு என்ற எண்ணிக்கையின் மடங்குகளான 6>12>24>48>96 முறை வலம் வந்து நம்பிக்கை குலையாமல் வழிபட்டால்> எல்லா சங்கடங்களும் நீங்கி வாழ்வில் சகல நன்மைகளும் பெறலாம்.

null

ஆஞ்சநேயர் ஸன்னதி

null

திருக்கோயில் பிரகார வலம் வரும் முறையில்> ஸ்ரீபத்மாவதி தாயாரும் ராம பக்த (ராமநாம) ப்ரிய ஆஞ்சநேயரும்> அதிகம் விலகாமல் நேருக்குநேராக ஸன்னதி கொண்டு> அருள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். இத்திருக்கோயிலில் இப்படி அபூர்வமாக அமைந்துள்ள தாயார்-ஆஞ்சநேயர் ஸன்னதிகள் விசேஷமானது.

தாயாருக்கு நேர் எதிரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் ஸன்னதியில் கைகளைக் கூப்பிக்கொண்டு ராமதூதனாக> ராமதாசனாக> தன்னை பிராட்டிக்கு அறிவிப்பது போல்> நிலை நிற்கும் மூலவர். அருகில் ஸீதா ஸமேத ராமபிரானை ஸதா மார்பில் தரித்துக்கொண்டு ராமநாம அனுபவித்தில் லயித்துக்கிடக்கும் உத்ஸவர். வியாழக்கிழமைகளிலும்> மூல ‍நக்ஷத்திர நாட்களிலும்> ஹனுமத் ஜெயந்தியின் போதும்> இடையிடையே பல நாட்களிலும்> சில> பல வடமாலை சாத்திக்கொண்டு அருள்புரியும் மூலவர். ஹனுமத் ஜெயந்தி திருநாளில் 108 வடமாலைகள் மற்றும் விதவிதமான சுவைமிக்க பழங்களால் ஆன பல மாலைகளும் சாத்திக்கொண்டு காட்சியளிக்கிறார். சில பல நாட்களில்> முக்யமாக வியாழக்கிழமை> மூல நக்ஷத்திரம் கூடிய தினங்களில்> பக்தர்கள் பிரார்த்தனைக்கு ஏற்றபடி வெண்ணை காப்புடன் அற்புதமாக காட்சியளிக்கிறார். ஹனுமத் ஜெயந்தியை ஒட்டி> பலப்பலர் கூடி> ஏக தின லக்ஷார்ச்சனை புரிவதையும் ஏற்றுக்கொண்டு விளங்குகிரார். பக்தர்களின் விருப்பப்படி> சில நாட்களில் வெற்றிலை> ஏலக்காய் மாலைகளோடு காட்சி தருகிறார். பிரதி வியாழக்கிழமை> தோறும் ராமநாம பஜனை நடைபெறுவது இக்கோயிலின் சிறப்பம்சமாகும். ஒவ்வொரு மூல நக்ஷத்திர நாளிலும்> மூலவரும்> உத்ஸவரும்> வேத கோஷத்துடன்> நவகலச ஸ்தபன திருமஞ்சனம் செய்வித்துக் கொள்கின்றனர்.

ஆண்டாள் ஸன்னதி

திருக்கோயில் ப்ரகார வடபாகத்தில் கர்ப்பக்ரஹத்துக்கு வலது புறம்> தாயார் ஸன்னதி அமைந்தது போல்> இடது புறம் அமைந்துள்ளது ஸ்ரீகோதா தேவி என்று போற்றப்படும் ஸ்ரீஆண்டாள் ஸன்னதி. ஸ்ரீஆண்டாள் மூலமூர்த்தி> பொறுமை> கருணை> வாத்ஸல்யம் போன்ற நமக்கு நன்மை தரும் பல குணங்கள் விளங்க அளவான அழகிய அமைப்போடு காட்சி தருகிறாள். உத்ஸவ மூர்த்தி> அன்பு> பாசம் மிளிரும் திருக்கண்களோடு விளங்குகிறார். ஒவ்வொரு மாதமும்> பூர நட்சத்திர நாளில் உத்ஸவ மூர்த்திக்கு> தசாவாதார மண்டபத்தில் நவகலச ஸ்தபன திருமஞ்சனம் வேத கோஷத்துடன் நடைபெறுகிறது. மாலையில்> கர்ப்பக்ரஹத்தில் பெருமாள்> (உத்ஸவ முர்த்தி)> ஸ்ரீதேவி> பூதேவியோடு கூடியிருந்து> நாச்சியார்> திருமொழியை அத்யாபகர்கள் ஸேவிக்க செவிசாய்த்து கூடியிருந்து குளிர்வாள். மார்கழி மாதத்தில்> தினந்தோறும் ஸ்ரீஆண்டாள் ஸன்னதியில்> திருப்பள்ளியெழுச்சி> திருப்பாவை ஸேவை> சாற்றுமறை (தீர்த்தம்> சடாரியோடு) காலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறுகிறது. மார்கழி மாதம் கடைசி மூன்று நாட்கள்> ஸ்ரீஆண்டாளின் நீராட்ட உத்ஸவமும்> மார்கழி 27ம் நாள் “கூடரைவெல்லும்” பாசுர நாளன்று 100 தடா நிறைந்த சர்க்கரைப்பொங்கல் ஸமர்ப்பிக்கும் உத்ஸவமும்> போகி பண்டிகையன்று> ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உத்ஸவமும் இத்ருக்கோயிலில் பிரபலமானவை.

null

கருடாழ்வார் சன்னதி

null

பகவானுக்கு உற்ற தோழனும்> வாகனமும்> த்வஜத்தில் (கொடியில்) விளங்குபவனும் நிலைக்கண்ணாடி போல் நேர் எதிரில் எப்போதும் நிற்பவனான ஸ்ரீகருடாழ்வான் சன்னதி>  ஸ்ரீவேங்கடேசப்பெருமாள் மூலஸ்தானத்திற்கு நேர் எதிரில் முன் மண்டபத்தில் அமைந்துள்ளது.  நினைத்த காரியங்கள்> எடுத்த காரியங்கள்> நிறைவேற> எல்லா வியாதிகளும் நீங்க> அரசாங்க காரியங்களில் வெற்றி பெற> பாம்பு> தேள்> போன்ற விஷ ஜந்துக்கள் துன்பம் நீங்க> எதிரிகளால் வரும் தீங்குகள் விலகி> மனக்கவலைகள் அகன்று எப்பொழுதும் மகிழ்ச்சியாய் வாழ> இந்த சன்னதியில் திருவிளக்கேற்றி> கருடாழ்வானை த்யானித்து> துதித்து ஸகல பலன்களையும் பக்தர்கள் பெற்று வருகின்றார்கள்.  ஆடி மாதம் பஞ்சமி கருட பஞ்சமியன்று மட்டும் மூலவராக காட்சி தரும் இக்கருடாழ்வானுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

திருமலை விநாயகர் சன்னதி

திருமகள் கேள்வன் “திருமால்” ஒருவனையே நோக்கும் உணர்வு கொண்ட விலஷண ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு மட்டுமல்லாமல் இதர தேவதைகளை வணங்குபவர்களும் ஸ்ரீவெங்கடேசபெருமாளை வணங்க முற்படும்போது அவர்களுக்கு தடைகளை நீக்கி வழிகாட்டி அருள்புரிய பெருமாளின் அருளை பெற்றுத்தர திருக்கோயிலில் நுழைந்தவுடனே த்வஜஸ்தம்பத்திற்கு வடக்கில் கோயில் ஊள்ளே பிரவேசிப்பவர்களுக்கு வலதுபுறத்தில் சன்னதி அமைத்துக்கொண்டு விலங்குகிறார் திருமலை விநாயகர். விநாயக சதுர்த்தி தினங்களில் விசேஸ பிரசாதம். ஆவணி மாத சதுர்த்தியன்று விசேஸ திருமஞ்சனத்துடன் சந்தன காப்பணிந்து அனைவர்க்கும் அனைத்திலும் தடைகளை நீக்கி அருள் புரிகிறார்.

null

ஆழ்வார்கள் ஆசார்யர்கள் ஸன்னதி

null

ஸ்ரீஆண்டாள் ஸன்னதியை ஒட்டி> ஸன்னதிக்கு வலப்புறத்தில்> மேடை போன்ற அமைப்பில்> நம்மாழ்வார்> திருமங்கையாழ்வார்> பகவத் ராமானுஜர்> ஆசார்ய வள்ளல் தேசிகன்> கோயில் மணவாள மாமுனிகள் உத்ஸவ மூர்த்திகளாக காட்சி தந்து அருள் புரிந்து வருகின்றனர். ஆழ்வார்கள் மேடையை ஒட்டி> ஸ்ரீஆண்டாள் ஸன்னதிக்கு நேரே தெற்கு நோக்கி பகவத் ராமானுஜரின் மூல மூர்த்தி காஷாயதாரியாய் முறுவல் நிலா அழகுடன்> கருணை பொழிந்திடு கமலக்கண்ணோடு மிக ஆழகிய வடிவழகுடன் காட்சி தந்து அருள் புரிந்து கொண்டிருக்கிறார். விசாகம்> கிருத்திகை> திருவாதிரை> திருவோணம்> மூலம் நட்சத்திர நாட்களில்> மாதம் தோறும் முறையே> நம்மாழ்வார்> திருமங்கையாழ்வார்> ராமானுஜர்> தேசிகன்> மணவாள மாமுனிகளுக்கு> தசாவதார மண்டபத்தில் நவகலச ஸ்தபன திருமஞ்சனம் வேத கோஷத்தோடு நடைபெறுகிறது. மாலை வேளையில்> அந்தந்த ஆழ்வார்> ஆசாரியர் பிரபந்தங்கள் ஸேவிக்கப்பட்டு> சாற்றுமறை நடந்து தீர்த்தம்> பிரஸாதம் விநியோகமாகிறது.

மார்கழி மாதம்> அத்யயன உத்ஸவத்தின்போது> நம்மாழ்வார்> திருமங்கையாழ்வார்> ராமானுஜர்> தேசிகன்> மணவாள மாமுனிகள்> பெருமாளுக்கு எதிரே திருவோலக்கம் இருந்து அருளிச்செயல் ஸேவையை செவிசாய்த்து உகந்து> கூடியவர்களை உகப்பிக்கும் வழிமுறை பல வருடங்களாக நன்கு நடைபெற்று வருகிறது.

வைகுண்ட ஏகாதசி அன்று> பெருமாளோடு நம்மாழ்வார் திருமஞ்சனம் கண்டருள்வதும்> அத்யயன உத்ஸவம் 20ம் நாள் நம்மாழ்வார் திருவடி தொழுதலும் 21ம் நாள் இயற்பா சாற்றுமறையும்> பெரம்பூர் வாழ் மக்களுக்கு மனதுக்கும்> ஆத்மநலனுக்குமாக அமையும் பெருவிழா.


by Bliss Drive Review